Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி.. தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக ஐகோர்ட்..!

Siva
வியாழன், 5 ஜூன் 2025 (14:14 IST)
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கர்நாடக  ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதி காமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி ஜோஷி ஆகிய இரண்டு நீதிபதிகள் இதை குறித்து விசாரணை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த விபத்து காரணமாக மக்களுக்கு எந்த அளவுக்கு கவலை இருக்கிறதோ, அதே அளவு எங்களுக்கும் கவலை இருக்கிறது; எனவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 
 ஏற்கனவே இந்த சம்பவத்தை விசாரணை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
 
இந்த நிலையில், கர்நாடக மாநில ஐகோர்ட் தானாக முன்வந்து இந்த வழக்கின் விசாரணையை ஏற்றுள்ளது. இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த சம்பவத்திற்கு விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். தவறுகள் யார் மீது இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments