Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (07:26 IST)
ஒரே நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், உத்தரப் பிரதேச பாஜக தலைவர் ஸ்வதேந்திரசிங் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனாவால் இருந்து குணமானார் என்பதையும் பார்த்தோம் 
 
அதேபோல் ஏற்கனவே மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாநில முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார், அவர் தான் கர்நாடக முதல்வர் எடியூரப்பா
 
கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது கொரோனா பாசிட்டிவ் எனக்கு வந்துள்ளது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனவே என்னுடன் சமீபத்தில் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். கர்நாடக முதல்வருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments