Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாலியை அடகு வைத்து டி வி வாங்கிய பெண் – எல்லாம் எதற்காக தெரியுமா?

Advertiesment
தாலியை அடகு வைத்து டி வி வாங்கிய பெண் – எல்லாம் எதற்காக தெரியுமா?
, சனி, 1 ஆகஸ்ட் 2020 (15:39 IST)
கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக தாலியை அடமானம் வைத்து தொலைக்காட்சி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக 5 மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்திவருகின்றன பள்ளிகள். அரசுப் பள்ளிகளோ கல்வி என்ற தொலைக்காட்சியை தொடங்கி அதன் மூலமாக பாடங்களை ஒளிபரப்பி வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள் கடாக் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவுக்காக தாலியை அடமானம் வைத்து அதில் தொலைக்காட்சி வாங்கியுள்ளார்.  இந்த சம்பவமானது ஊடகங்களில் வெளியாகி பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள கஸ்தூரி ‘ஊரடங்கு காரணமாக எனக்கும் என் கணவருக்கும் வேலை இல்லை என்பதால் வருமானமே இல்லை. அதனால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா சோதனை? அத்துமீறிய பரிசோதகர்!