Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டுகிறேன்: ராகுல்காந்தி ட்வீட்

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (19:07 IST)
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அமித்ஷா விரைவில் குணமாக வேண்டும் என்று பாஜக மாநில முதல்வர்களும், பாஜக தலைவர்களும் தொண்டர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் 
 
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரும் நடிகையுமான குஷ்புவும் தனது டுவிட்டரில் அமித்ஷா குணமாக வாழ்த்து தெரிவித்தார். குஷ்பு மட்டுமின்றி மாற்று கட்சியை சேர்ந்த பலரும் அமித்ஷா மிகவிரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியும் தனது டுவிட்டரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என டுவிட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments