Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெருக்கடி…பல்லாயிரம் பேருக்கு வேலை பறிபோகும் – ப .சிதம்பரம் எச்சரிக்கை

Advertiesment
நெருக்கடி…பல்லாயிரம் பேருக்கு வேலை பறிபோகும் – ப .சிதம்பரம் எச்சரிக்கை
, வெள்ளி, 31 ஜூலை 2020 (16:21 IST)
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்னும் பல்லயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அழிந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை

இந்த இரண்டு துறைகளும் குலைந்தால் இன்னும் பல்லாயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அழிந்து விடும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசு செயலிழந்து நிற்கிறது மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்று நான் பல நாட்களாகச் சொல்லிவருகிறேன்.

2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது: (1) தொலைதொடர்பு (2) விமானப் போக்குவரத்து என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருப்பவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் திட்டமா?