கான்பூர் தேஹத் மாவட்டம், ஜசாபூர் கிராமத்தில் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருந்த மோகினி என்ற பெண், தனது மருமகனால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
அதிகாலை 1:30 மணியளவில், மோகினியின் மருமகன் கிருஷ்ணா என்கிற ஷிவம் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கியுள்ளார். இதை மோகினி கண்டித்தபோது, ஆத்திரமடைந்த கிருஷ்ணா கம்பால் தாக்கியதில் மோகினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
"அவரது குடிப்பழக்கத்தை ஆட்சேபித்ததால் ஏற்பட்ட சண்டையில், அத்தையை அடித்து கொன்றபின் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணா தப்பி ஓடிவிட்டார்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மோகினியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது ஒரு திடீர் குடிபோதை தாக்குதல் என்றும், இருவருக்கும் இடையே முன்விரோதம் இல்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். "குடித்ததால் ஏற்பட்ட கோபத்தில் மகன் இந்த கொலையைச் செய்துவிட்டான்" என்று கிருஷ்ணாவின் தந்தை தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவான கிருஷ்ணாவை தேடும் பணி நடைபெறுகிறது.