Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போரும் அமைதியும் புத்தகத்தை ஏன் உங்கள் வீட்டில் வைத்திருந்தீர்கள் – நீதிபதியின் கேள்வியால் சர்ச்சை !

போரும் அமைதியும் புத்தகத்தை ஏன் உங்கள் வீட்டில் வைத்திருந்தீர்கள் – நீதிபதியின் கேள்வியால் சர்ச்சை !
, வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (14:20 IST)
வழக்கு ஒன்றின் விசாரணையின் போது ரஷ்ய எழுத்தாளர் எழுதிய உலகப்புகழ் பெற்ற போரும் அமைதியும் என்ற புத்தகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்றை நீதிபதி எழுப்பியுள்ளார்.

மஹர் சமுதாயத்தினர் மராட்டிய பேஷ்வா அரசர்களோடு நடத்திய புகழ்பெற்ற போரின் 200 ஆவது ஆண்டு நினைவு பேரணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து இதில் கலந்துகொண்டவர்கள் மற்றும் ஏற்பட்டாளர்கள் எனப் பலரைக் கைது செய்த்து காவல்துறை.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளரான வெர்னோன் கோசல்வேஸ் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார். அதுசம்மந்தமான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கோசல்வேஸின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காவல்துறை அவரது வீட்டில் ராஜ்ய தமன் விரோதி என்ற புத்தகம், டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் என்ற புத்தகம் மற்றும் மாவோயிஸ்டுகள் தொடர்பான சில புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன என தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள் ‘போரும் அமைதியும் புத்தகம் ரஷ்யாவில் நடந்த போரைப் பற்றிய புத்தகம். அதை ஏன் நீங்கள் வைத்திருந்தீர்கள். இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்கவேண்டும் ‘ எனக் கூறியுள்ளார். இது நாடு முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் புத்தகம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற புத்தகம் என்பதும், டால்ஸ்டாய் காந்தியின் விருப்பத்த்குக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிவே இல்லாமல் செல்லும் தங்கம் விலை – 112 ரூபாய் உயர்வு !