12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

Siva
செவ்வாய், 28 அக்டோபர் 2025 (15:02 IST)
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அமன் குமார் என்ற இளைஞர், போலியான வருமான வரித்துறை அதிகாரி வேடமிட்டு சுமார் 35 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அகமதாபாத்தை சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பெண்ணிடம் மட்டும் ரூ.9.20 லட்சம் மோசடி செய்துள்ளார்.
 
அமன் குமார், அரசு வேலைக்கு தயாரானவர்களை தொடர்புகொண்டு, வருமான வரி துறையில் வேலை வாங்கி தருவதாக உறுதியளிப்பார். ஐடி துறையின் மின்னஞ்சல் முகவரியை போலவே போலியாக உருவாக்கி, பயிற்சி மற்றும் நேர்காணல்களுக்காக அவர்களை கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வரவழைத்துள்ளார். வேலைக்கு ரூ.12 லட்சம் பணம் கேட்டதில், பாதிக்கப்பட்ட டிகிரி படித்த பெண் ரூ.9.20 லட்சம் செலுத்தியுள்ளார். இதற்கு பதிலாக போலியான நியமன கடிதங்கள் மற்றும் லெட்டர்ஹெட்களை அமன் குமார் வழங்கியுள்ளார்.
 
விசாரணையில், வெறும் 12-ஆம் வகுப்பு படித்த அமன் குமார், 35 பேரிடம் மோசடி செய்ததும், அவர் மீது 2023-ல் சிபிஐ-யிலும் புகார் இருப்பதும் தெரியவந்தது. தற்போது அமன் குமார் அகமதாபாத்தில் காவல்துறை காவலில் உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments