சமீபகாலமாகவே இந்திய அணியில் யுஷ்வேந்திர சஹாலுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை அவரே டிவிட்டரில் எமோஜிக்கள் மூலமாக தெரிவித்துள்ளார். அதில் விடியலுக்காக காத்திருப்பதாக எல்லாம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த கடந்த சில மாதங்களாகவே அவர் தன்னுடைய மனைவி தனுஸ்ரீ வெர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக சமூகவலைதளங்களில் பதிவுகள் காணப்பட்டன. அதற்கு முக்கியக் காரணம் சமீபத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனுஸ்ரீயின் புகைப்படங்களை எல்லாம் நீக்கி, அவரை பின்தொடர்வதையும் நிறுத்தினார்.
இந்நிலையில் கடந்த மாதம் அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து அது சம்மந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் விவாகரத்து முடிவை வெளிப்படுத்தி இருந்தனர். இதையடுத்து தற்போது மனைவிக்கு ஜீவனாம்சமாக சஹால் 4.75 கோடி ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஏற்கனவே 2.37 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள தொகை விரைவில் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.