தெலுங்கானாவில் எறும்புகளை கண்டு பயந்த இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் பகுதியை சேர்ந்தவர் ஐடி ஊழியர் ஸ்ரீகாந்த். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மனுஷா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மனுஷாவிற்கு சிறு வயதில் இருந்தே எறும்புகளை கண்டால் அஞ்சி நடுங்கும் விநோத பயம் இருந்துள்ளது.
மிர்மிகோ போபியா எனப்படும் இந்த வியாதிக்காக மனநல மருத்துவரிடம் மனுஷா சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு எறும்புகள் மீதான பயம் குறையவில்லை. சம்பவத்தன்று வீட்டை சுத்தம் செய்ய மனுஷா முயன்றபோது அங்கு நிறைய எறும்புகள் இருந்ததால் பயந்து நடுங்கியுள்ளார். பின்னர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நூதனமான மன வியாதியால் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K