ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

Mahendran
திங்கள், 31 மார்ச் 2025 (13:56 IST)
பிரதமர் நரேந்திர மோடி தனது ஓய்வு குறித்து ஆலோசிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை  மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருப்பது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு சமீபத்தில் பிரதமர் மோடி சென்றிருந்தார். பிரதமராக பதவியேற்ற பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அங்கு முதன்முறையாக விஜயம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், "பதவிக்காலம் முடிந்து விட்டதால், ஓய்வு குறித்து அறிவிக்கவே மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்குச் சென்றார். ஆர்எஸ்எஸ் புதிய தலைமை மாற்றத்தை விரும்புகிறது. அடுத்த பிரதமரை அவர்கள் தேர்வு செய்வார்கள்" என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
 
இந்த கருத்து அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஹுசைன் தல்வாய், "75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அறிவிப்பது ஆர்எஸ்எஸ் நெறிமுறை. மோடியின் காலம் முடிந்துவிட்டது" என்றார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments