Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

Mahendran
திங்கள், 31 மார்ச் 2025 (13:05 IST)
கல்வியிலும் திறமையிலும் உயர்வெற்றி காண முயலுங்கள். தைரியமாக விளையாடுங்கள், நேர்மையான முறையில் வெற்றி பெறுங்கள் என சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிருந்துள்ளார்.
 
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த அதிரடி கால்பந்து போட்டியில் பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் அணிகள் கடுமையாக மோதின. இதில் பிரேசிலின் புகழ்மிக்க வீரர்கள் ரொனால்டினோ, ரிவால்டோ, எட்மில்சன், காபு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தங்கள்  திறமையை வெளிப்படுத்தினர்.
 
இந்தச் சிறப்பான போட்டியை பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்ததாவது:
 
"சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற பிரேசில் ஜாம்பவான்கள் மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் அணிகளின் கால்பந்து போட்டி பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டின் அதீத உற்சாகம் தமிழ்நாட்டை பெருமிதத்துடன் உற்சாகமூட்டியது. இது ஒரு சாதாரண போட்டியாக இல்லாமல், நினைவில் நிற்கும் ஒரு தருணமாகவும், எதிர்கால வீரர்களுக்குத் தூண்டுதலாகவும் அமைந்தது.
 
குழந்தைகளே, கல்வியிலும் திறமையிலும் உயர்வெற்றி காண முயலுங்கள். தைரியமாக விளையாடுங்கள், நேர்மையான முறையில் வெற்றி பெறுங்கள்!"
 
இவ்வாறு அவர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

75 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது மருமகன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

பதிலடி கொடுக்கா விட்டால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. ஜோதிமணி எம்பி

அடுத்த கட்டுரையில்