Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் சீட்டில் பங்கு கேட்கும் ஆதித்ய தாக்கரே? – இணங்குமா பாஜக?

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (12:26 IST)
மஹாராஷ்டிரத்தில் பாஜக பெருவாரியான தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ள போதும் முதல்வர் பதவியை சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல் அக்டோபர் 21 அன்று நடந்து முடிந்தது. இதில் மத்தியில் ஆளும் பாஜகவும், சிவசேனா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். பாஜக அடுத்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் என்று கூறிக்கொண்டிருக்க, சிவசேனாவோ பால் தாக்கரேயின் பேரன் ஆதித்ய தாக்கரேதான் அடுத்த முதல்வர் என கூறி வந்தது.

இந்நிலையில் தற்போது இருக்கட்சிகளும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளன. பெரும்பான்மையை விட அதிக வாக்குகள் பெற்றிருப்பதால் பாஜக ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. ஆனால் சிவசேனாவை சேர்ந்தவர்களோ ஏற்கனவே முதல்வர் பதவியை இரு கட்சியும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தே கூட்டணி அமைத்து கொண்டதாகவும் கூறுகின்றனர்.

இந்த சிக்கலை சமாளிக்க பாஜக ஆதித்ய தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவியை அளிக்கும் என்றும் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments