Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 பரிசு..

Advertiesment
பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 பரிசு..

Arun Prasath

, வியாழன், 24 அக்டோபர் 2019 (18:43 IST)
ஆவிகள், பேய்கள் ஆகியவை இருப்பதை நிரூபித்தால் ரூ.50,000 ரொக்க பரிசு தரப்படும் என ஒடிசாவின் கஞ்சாம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் அனேக மக்கள், மாந்தீரிகம், சூனியம், ஆவிகள் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும், வீட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போனால் கூட மருத்துவமனை செல்லாமல் மந்திரவாதிகளிடம் செல்வதகவும் புகார் எழுந்துவருகிறது.

மேலும் சமீபத்தில் கோகாபூர் என்னும் ஊரில் மந்திரவாதிகள் அறிவுறையின் பேரில் 6 நபர்களுக்கு பற்களை பிடுங்கிய சம்பவமும் நடந்துள்ளது. இவ்வாறு பல கிராமங்களில் மூட நம்பிக்கையால் மக்கள் ஏமாறுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆவிகள், பேய்கள் உள்ளன என்பதை நிரூபித்தால், அவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்ட ஆட்சியர் விஜய் அம்ருதா குலாங்கே அறிவித்துள்ளார்.

மேலும் அப்பகுதியில் உள்ள பகுத்தறிவு அமைப்புகளும், அந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு மூடநம்பிக்கை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழிவு நீரில் அம்மன் சிலை.. கடத்தல் கும்பலின் வேலையா??