ஜாமீன் நிலைப்பாட்டில் பின்வாங்கிய சிதம்பரம்: காரணம் என்ன?

வியாழன், 12 செப்டம்பர் 2019 (12:28 IST)
நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளது ப.சிதம்பரம் தரப்பு. 
 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப. சிதம்பரம் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆம், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தற்கு எதிராக ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் என செய்திகள் தெரிவித்தன. 
 
இந்நிலையில் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் சிதம்பரம் தரப்பு ஜாமின் மௌவை வாபஸ் பெற்றிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 
எதற்காக ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது என்ற காரணங்கள் தெரியாத நிலையில், இதற்கு முன் உச்சநீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தின் ஜாமீன் மனு மறுக்கப்பட்டதும், ஆனால், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நளினி பரோல் மனு நீட்டிப்பு மனு – நிராகரித்த நீதிமன்றம் !