Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

Mahendran
சனி, 19 ஜூலை 2025 (15:15 IST)
மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்த 19 பேர், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இந்திய அடையாள ஆவணங்கள் இருந்தபோதிலும், 'சட்டவிரோத வங்கதேசத்தவர்கள்' என்று முத்திரையிடப்பட்டு ஒடிசாவில் உள்ள ஒரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "தங்கள் மொழி காரணமாகவே தாங்கள் குறிவைக்கப்பட்டதாக" அவர்களில் ஒருவர் கூறியிருப்பது இந்த சூழ்நிலையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
 
இந்த தடுப்புக்காவல் விவகாரம் அரசியல் ரீதியாகப்பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத ரீதியாக வங்க மொழி பேசுபவர்களை பாஜக குறிவைப்பதாக கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடியாக, பாஜகவின் சுவேந்து அதிகாரி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை 'ஊடுருவியவர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
 
இந்த விவகாரம் குறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், முகாமில் வைக்கப்பட்டுள்ள 19 பேரும் ஏற்கனவே இந்திய குடிமக்கள் தான் என சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சுக்ரபாத் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அரசியல் மோதல் காரணமாக, இந்த 19 பேரும் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments