இந்தியாவில் நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை பொருத்து உங்களின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்திய மக்கள் பெரும்பாலானோர் இதய நோய், சுவாச நோய் மற்றும் வயிற்றுப்போக்கின் காரணமாக உயிரிழக்கின்றனர்.
இது குறித்த ஆய்வின் மூலம் மாநில அளவிலான நோய் பற்றாக்குறை ஊக்க மையத்தின் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட நோய்களின் காரணமாக அதிக இறப்புகள் எந்தெந்த மாநிலங்களில் நிகழ்கிறது என பார்ப்போம்...
இதய நோய்:
ரத்த ஓட்ட தடையால் ஏற்படும் இதய நோயானது (Ischemic heart disease) நம் வாழ்க்கை முறையோடு தொடர்புடைய ஒரு இதய நோயாகும். இந்த நோயின் தாக்கம் அதிக வருவாய் மாநிலங்கலான பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இந்த நோயின் தாக்கதால் ஏற்படும் மரணத்தின் விகிதம் தேசிய சராசரியை விட இரு மடங்கு அதிகமாக உள்ளது என தெரியவந்துள்ளது.
வயிற்றுப்போக்கு:
சாதாரணமாக கருதப்படும் வயிற்றுப்போக்காலும் மரணங்கள் அதிக அளவில் ஏற்படுகிறது. குறைந்த தனிநபர் வருமானம் பெறும் ஏழை மாநிலங்களான ஜார்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் ஒடிசாவில் வயிற்றுப்போக்கின் காரணமாக உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது.
காற்று மாசுப்பாடு:
க்ரோனிக் அப்ஸ்டிரச்டிவ் புல்முனரி டிசிஸ் (Chronic obstructive pulmonary disease-COPD) நீண்ட
கால சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோய். இந்நோயால் வட மற்றும் மேற்கு மாநிலங்கலான உத்தரகாண்ட், உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் வாழும் மக்கள் அதிகமாக உயிரிழக்கிறார்கள்.