Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 30 ஜூன் 2025 (18:13 IST)
இந்திய ரயில்வே நாளை  அதாவது ஜூலை 1 முதல் ரயில் பயண கட்டணங்களை உயர்த்தவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரயில்வே அமைச்சகம் நீண்ட நாட்களாக கட்டண உயர்வு குறித்து பரிசீலித்து வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மெயில் மற்றும் விரைவு ரயில்கள்: ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
குளிரூட்டப்பட்ட ரயில்கள்: ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு: ஒரு கிலோமீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
 
தினசரி பயணிகள் மற்றும் குறைந்த தூர பயணிகளின் நலன் கருதி சில முக்கிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
 
புறநகர் ரயில் பயணச்சீட்டு  கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.
 
மாதாந்திர பயணச்சீட்டுக் கட்டணத்திலும் எந்த மாற்றமும் இல்லை.
 
500 கி.மீ. வரையிலான இரண்டாம் வகுப்பு பயணிகளுக்குக் கட்டண உயர்வு இல்லை.
 
நீண்ட தூரப் பயணங்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்வு:
 
500 முதல் 1500 கி.மீ. தூரத்திற்கு: ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது.
 
1501 முதல் 2500 கி.மீ. தூரத்திற்கு: ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.
 
2500 முதல் 3000 கி.மீ. தூரத்திற்கு: ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது.
 
மொத்தத்தில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, குளிரூட்டப்படாத பெட்டிகளுக்கான கட்டணம் கி.மீட்டருக்கு 1 பைசாவும், அனைத்து வகை குளிரூட்டப்பட்ட பெட்டிகளுக்கான கட்டணம் கி.மீட்டருக்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

பஹல்காம் சுற்றுலா சென்ற 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிக்கு ஜாமின் மறுத்த நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments