Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

Siva
திங்கள், 30 ஜூன் 2025 (16:43 IST)
மேகாலயாவுக்கு தேனிலவு கொண்டாட வந்த ராஜா, சோனா தம்பதியில் ராஜா சோனாவால் கொல்லபப்ட்ட சம்பவத்தை அடுத்து மேகாலயாவில் புதிய பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேகாலயாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வழிகாட்டிகள் நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த "தேன்நிலவு கொலை வழக்கு" செய்திகளில் பரவியபோது, சுற்றுலா பயணிகள் பலர் மேகாலயா மட்டுமின்றி வடகிழக்கு இந்தியாவே பயணம் செய்ய பாதுகாப்பற்றது என்று முடிவெடுக்க தொடங்கினர். இந்தூர் தம்பதியரான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் சம்பந்தப்பட்ட  வழக்கிற்கு பிறகு, சிலர் தங்கள் முன்பதிவுகளையே ரத்து செய்தனர். இன்னும் பலர் தங்கள் பாதுகாப்புக் குறித்து கவலையை வெளிப்படுத்தினர்.
 
இந்த நிலையில் மேகாலயா அரசு விதித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இதோ:
 
சுற்றுலாப் பயணிகளும், பார்வையாளர்களும் கட்டாயமாக பதிவு செய்துகொள்வது, அதிகப் பயணிகள் வருகை தரும் சுற்றுலா தலங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, மற்றும் அரசின் சுற்றுலா செயலியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.
 
தற்போதுள்ள சுற்றுலா செயலி மூலம், அனைத்துத் தங்குமிடங்களும் தங்கள் விருந்தினர்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இப்போதைய நிலவரப்படி, 60% தங்குமிடங்கள் மட்டுமே இந்த செயலியைப் பயன்படுத்துகின்றன. இனிமேல், இது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
 
மேலும் தனியார் வாகனங்களை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் புதிய வாகன குழுக்களை அரசே அறிமுகப்படுத்த  திட்டமிட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்யும் சிங்கள படை.. இன்று 7 பேர் கைது..!

ஐசிஐசிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் இனி ரூ.50,000.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments