Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்பி மோகம் - உயிரைவிட்ட 5 மருத்துவ மாணவர்கள்

செல்பி மோகம் - உயிரைவிட்ட 5 மருத்துவ மாணவர்கள்
, ஞாயிறு, 13 மே 2018 (17:00 IST)
பாகிஸ்தானில் பாலம் மீது செல்பி எடுத்த போது, பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.
 
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் சுமார் 25 பேர், சுற்றுலா சென்றனர். அப்போது ஆற்றங்கரையோரம் உள்ள சிறிய மரப்பாலத்தின் மீது நின்று புகைப்படம் எடுத்தனர். எதிர்பாரா விதமாக பாரம் தாங்காமல்  மரப்பாலம் நொறுங்கி விழுந்தது. பாலத்தில் நின்று கொண்டிருந்த 25 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
webdunia
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர், 5 பேரை பிணமாக மீட்டனர். சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆதலால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. செல்பி மோகத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - விபத்தில் 7 பேர் பலி