Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டு கேட்டு வந்த அவ்ளோ தான்: சந்திரபாபுபை மிரட்டும் சந்திரசேகர ராவ்

Advertiesment
ஓட்டு கேட்டு வந்த அவ்ளோ தான்: சந்திரபாபுபை மிரட்டும் சந்திரசேகர ராவ்
, வெள்ளி, 5 அக்டோபர் 2018 (12:12 IST)
ஓட்டு கேட்டு வரும் சந்திரபாபுவை மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி தீவிரமாகி பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 
மறுபுறம் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வர் பதவி பெற வேண்டும் என சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி முயற்சித்து வருகிறது.
 
இந்நிலையில் தெலுங்கானாவில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சந்திரசேகர ராவ், சந்திரபாபுவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
 
பல ஆண்டுகளாக மோடிக்கு கூஜா தூக்கிக்கொண்டிருந்த சந்திரபாபு நாயுடு, வெட்கமே இல்லாமல் தற்பொழுது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். 
 
சந்திரபாபு நாயுடு ஓட்டு கேட்டு தெலுங்கானாவிற்கு வந்தால் மக்கள் அவரை ஓட ஓட விரட்டுவார்கள் என்றும் நான் எனது 3வது கண்ணை திறந்தால் சந்திரபாபு நாயுடு எரிந்து சாம்பலாகி விடுவார் எனவும் அவர் ஆவேசமாக பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பொதுமக்கள் கவனத்திற்கு