இந்தியா-அமெரிக்கா இடையே இன்று வர்த்தக பேச்சுவார்த்தை! 50% வரி ரத்து செய்யப்படுமா?

Siva
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (09:23 IST)
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் இன்று தொடங்குகிறது. சில காரணங்களால் தடைபட்டிருந்த இந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்ததால் அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதால், அமெரிக்கா விதித்த 50% வரி ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரி, ஏற்றுமதியை பாதித்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை வரி நீக்கம் குறித்து சாதகமான முடிவை எடுக்குமா என்பதை பொறுத்தே இந்தியா-அமெரிக்கா உறவின் அடுத்தகட்ட வளர்ச்சி அமையும். வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments