ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சி ஆபத்தில் இருந்தபோது பாஜகதான் காப்பாற்றியது என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதேசமயம் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதால் வலுவிழக்கும் என அரசியல் விமர்சகர்களும் கூறி வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி “ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை காப்பாற்றியதே பாஜகதான். ஜெயலலிதா மறைந்ததும் அதிமுக ஆட்சியை கவிழ்த்து கபளீகரம் செய்ய நினைத்தனர். அதிமுகவை உடைக்க முயன்றவரை மீண்டும் மன்னித்து துணை முதல்வராக ஆக்கினோம்.
நன்றி மறப்பது நன்றன்று என்ற வார்த்தைக்கு ஏற்ப பாஜக அதிமுகவை காப்பாற்றியது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது பாஜக எந்த தொந்தரவும் தரவில்லை” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K