Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பின்கோடுக்கு பதில் டிஜிபின்.. டிஜிட்டலுக்கு மாறுகிறது இந்திய அஞ்சல் துறை..!

Advertiesment
டிஜிபின்

Siva

, வியாழன், 5 ஜூன் 2025 (14:00 IST)
இனிமேல் பாரம்பரிய 6 இலக்க பின்கோடு எண்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள DIGIPIN சேவையின் மூலம், உங்கள் இருப்பிடம் அடிப்படையில் ஒரு 10 எழுத்து/எண் கலவையுடன் கூடிய டிஜிட்டல் குறியீடு வழங்கப்படும்.
 
DIGIPIN என்பது உங்கள் வீடு, அலுவலகம் போன்றவற்றின் துல்லியமான கோஆர்டிநேட்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவாகும். இதன் மூலம், உங்கள் கடிதங்கள் மற்றும் பார்சல்கள் சரியான முகவரிக்கு செல்லும்.
 
இந்திய அஞ்சல் துறை இதற்காக https://dac.indiapost.gov.in/mydigipin/home என்ற இணையதளத்தை துவக்கியுள்ளது. இங்கு சென்று location access அனுமதித்தால், உங்கள் DigiPin தானாக உருவாகும்.
 
DigiPin ஐ பயன்படுத்துவது தபால், கூரியர், அவசர சேவைகள் (போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு) போன்றவற்றுக்கு பயனுள்ளதாகும்.
 
IIT ஹைதராபாத், NRSC, ISRO ஆகியவை இணைந்து இதனை வடிவமைத்துள்ளன. ஒவ்வொரு 4 மீ x 4 மீ இடத்திற்கும் தனித்துவமான 10 எழுத்துகளைக் கொண்ட குறியீடு வழங்கப்படுகிறது.
 
பாரம்பரிய பின்கோடு ஒரு பெரும் பகுதியைக் குறிக்கிறது. ஆனால் DIGIPIN உங்கள் வீட்டைத் துல்லியமாக காட்டுகிறது, எனவே இடம் கண்டுபிடிக்க மிக எளிதாகிறது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுற்றுலா சென்ற நேரத்தில் பணிநீக்கம்! 300 பேரை திடீர் பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட்!