Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

Advertiesment
MP Kanimozhi

Prasanth Karthick

, வெள்ளி, 23 மே 2025 (08:28 IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்தும், இந்தியா நிலைப்பாடு குறித்தும் விளக்கமளிக்க கனிமொழி தலைமையிலான எம்.பி குழு ரஷ்யா சென்றுள்ளனர்.

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாமை ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக இந்திய ராணுவம் தாக்கியது. இதனால் இரு நாடுகள் இடையே போர் ஏற்பட்டு பின்னர் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்தியா தங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி பொதுமக்களை தாக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.

 

இந்நிலையில் பயங்கரவாததிற்கு எதிரான இந்தியாவின் நிலைபாட்டை விளக்கவும், இந்தியாவிற்கு ஆதரவு திரட்டும் வகையிலும் மத்திய அரசு, நாடாளுமன்ற எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்களை அமைத்துள்ளது, இந்த குழுவினர் உலக நாடுகளுக்கு பயணம் செய்து இந்தியாவின் நிலைபாடு குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.

 

அந்த வகையில் ஜனதா தள எம்.பி சஞ்சய் ஹா தலைமையிலான குழு ஜப்பானுக்கும், சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு ஐக்கிய அமீரகத்திற்கும் சென்றுள்ளனர். திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்யா சென்றடைந்துள்ளனர்.

 

அங்கு ரஷ்ய அமைச்சர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கலந்து உரையாட உள்ளனர். அதை தொடர்ந்து அடுத்து ஸ்லோவேனியாவிற்கு செல்ல உள்ளனர். ரஷ்ய அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பிறகு அதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கனிமொழி குழுவினர் விளக்கம் அளிக்க உள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!