Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்க விசுவாசம் பாகிஸ்தான் கூடத்தான்..! இந்தியாவை காலை வாரிவிட்ட துருக்கி! - அதிபர் ஓப்பன் அறிவிப்பு!

Advertiesment
Turkey Pakistan friendship

Prasanth Karthick

, வியாழன், 15 மே 2025 (11:04 IST)

இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவிய துருக்கி, வெளிப்படையாக தனது பாகிஸ்தான் ஆதரவை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத பகுதிகளை இந்தியா தாக்கியது. அதற்கு பதில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளையும் தடுத்தது. 

 

இந்நிலையில் இந்த போரில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி உதவி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வியாபாரிகள், துருக்கியுடனான பல வியாபாரங்களை நிறுத்தியுள்ளனர். ஆனால் அதை பற்றி கவலைப்படதாக துருக்கி தனது பாகிஸ்தான் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

 

இதுபற்றி அறிக்கை வெளியிட்ட துருக்கி அதிபர் எர்டோகன் “துருக்கி - பாகிஸ்தான் இடையேயான சகோதரத்துவம் உண்மையான நட்ப்புக்கு சான்று. உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே இப்படி ஒரு நட்புறவைக் கொண்டிருக்கின்றன. துருக்கியை போலவே பாகிஸ்தானிலும் அமைதி, ஸ்திரத்தன்மை உருவாக விரும்புகிறோம். கடந்த காலங்களை போலவே எதிர்காலத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்போம்” எனக் கூறியுள்ளார்.

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்தியா பல உதவிகளை செய்தது, ஆனால் அதையெல்லாம் மறந்து துருக்கி மொத்தமாக பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டை எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் ஜம்மு காஷ்மீரில் ஆய்வு.. நேரில் செல்கிறார் ராஜ்நாத் சிங்..!