Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்றே கணித்த அப்துல் கலாம்! அடித்து துவம்சம் செய்த ஆகாஷ் ஏவுகணைகள்! - மாஸ் காட்டிய இந்திய கண்டுபிடிப்பு!

Advertiesment
Akash Missiles

Prasanth Karthick

, திங்கள், 12 மே 2025 (16:46 IST)

பாகிஸ்தானுடனான இந்தியாவின் போரை உலக நாடுகள் உற்று நோக்கிய நிலையில் எந்த வித தாக்குதலையும் சமாளித்த ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க சில நாடுகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.

 

இந்த ஆகாஷ் ஏவுகணைகள் இந்தியாவின் அக்னி ஏவுகணைகள் கண்டுபிடிப்பிற்கு பிறகு தயாரிக்கப்பட்டவை. இந்த ஆகாஷ் ஏவுகணைகள் முழுக்க முழுக்க இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (DRDO) உருவாக்கியதாகும். குறிப்பிட்ட இலக்கை தாக்குவதுடன், தாக்க வரும் இலக்குகளையும் குறிவைத்து தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணைகள் உருவாக்கள் மூளையாக செயல்பட்டவர் டிஆர்டிஓ இயக்குனர் விஞ்ஞானி டாக்டர் பிரகலாத் ராமராவ்.

 

இவரது ஆற்றல் கண்டு டிஆர்டிஓவின் இயக்குநராக இவரை நியமித்ததே அக்னி ஏவுகணைகளின் நாயகன், முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம்தான்.

 

தற்போது பாகிஸ்தான் இந்தியாவை தாக்க துருக்கி உள்ளிட்ட பல நாடுகளிடம் வாங்கிய ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தியபோதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் அவற்றை தவிடுப்பொடியாக்கியுள்ளன.

 

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த விஞ்ஞானி பிரகலாத் ராமராவ் “பாகிஸ்தானின் ஏவுகணைகள், ட்ரோன்களை ஆகாஷ் ஏவுகணை அழித்த நாள்தான் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள். ஆகாஷ் ஏவுகணைகள் ஆற்றல் வாய்ந்தது மட்டுமல்ல ஆபத்தானும் கூட. பாகிஸ்தானுடனான போரில் ஆகாஷ் ஏவுகணை சிறப்பாக செயலாற்றியுள்ளது” என கூறியுள்ளார்.

 

கையாள எளிதாகவும், அதேசமயம் ஆற்றல் வாய்ந்ததாகவும் விளங்கும்  இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க அர்மீனியா ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று இரவு 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு..!