Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா பாதிப்பு… 12 ஆவது இடத்தில் இந்தியா – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Advertiesment
கொரோனா பாதிப்பு… 12 ஆவது இடத்தில் இந்தியா – அதிர்ச்சி ரிப்போர்ட்!
, புதன், 13 மே 2020 (06:58 IST)
கொரோனா பாதிப்பில் இந்தியா 12 ஆவது இடத்தில் தற்போது உள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் இன்னும் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. பாதிப்பு வெகுவாகக் குறைந்த சீனாவில் கூட இப்போது வைரஸ் தாக்கம் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வைரஸ் தாக்கம் அதிகமாகி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது இந்தியா கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் 12 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,292 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரு தினங்களில் நமக்கு முன்னாள் சீனாவை மிஞ்சிவிடும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் 50 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையிலும் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 - ஆம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும்.. - பிரதமர் மோடி