Publish Date: Tue, 12 May 2020 (19:51 IST)
Updated Date: Tue, 12 May 2020 (19:53 IST)
இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 8 பேர் இன்று கொரோனாவால் பலியாகியுள்ளனர். அதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,002 லிருந்து 8,718 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,134 ஆகும். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆகும். இதுவரை பரிசோதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,55,584 பேர் என தெரிவித்துள்ளது.
சென்னையில், இன்று மேலும் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எனவே, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,882 ஆக அதிகரித்துள்ளது.