Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ? முடிவுக்கு வருமா ? இன்று மோடி நாட்டு மக்களுக்கு உரை ...

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ?  முடிவுக்கு வருமா ? இன்று மோடி நாட்டு மக்களுக்கு உரை ...
, செவ்வாய், 12 மே 2020 (18:42 IST)
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யவும், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 5 வது முறையாக நேற்று ஆலோசனை செய்ததாகத் தகவல் வெளியானது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது குறித்த விவரம் பின்வருமாறு.... 

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,152 இருந்து 70,756 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917 இருந்து 22,455 ஆக உயர்ந்துள்ளது

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206 இருந்து 2,293 ஆக உயர்ந்துள்ளது 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. கொரொனா பாதிப்பு, பொதுஉரடங்கு போன்ற காரணங்களால் பொருளாதார பாதிப்பு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள இந்தியாவுக்கும் வல்லரசு நாடான அமெரிக்க பண உதவி அளிக்க முன் வந்துள்ளது.

இந்நிலையில், இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் 3வது கட்ட பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் உரையாற்றுகிறார். இதில் ஊரடங்கு முடிவதால் மக்கள் எவ்வாறான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிப்பார் என தெரிகிறது. 

நாட்டில் ஏழை எளிய மக்கள் முதற்கொண்டு பல்வேறு தொழில்புரிவோர் தொழில்முனைவோர் எனப் பலரும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருமே கொரோனா தடுப்பு பணியால் ஊரடங்குக் காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஏற்கனவே பொது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ’’உலக சுகாதார துறையும் கொரோனாவோடு வாழப் பழகுங்கள்’’ என அறிவுறுத்தியுள்ளது. அதனால் மக்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவை பிரதமர் மோடி அறிப்பார் என அவர் பேசவுள்ளதைக்  கேட்க எல்லோரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் சேவை: ரயில்வே அறிவிப்பு