உக்ரைன் நாட்டின் கீவ் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
தற்போது, உக்ரைன் நாட்டின் மீது ரஷிய நாட்டு ராணுவம் போர் தொடுத்துள்ளதால், கடந்த 11 மாதங்களாக இரு நாடுகள் இடையே போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் கீவ் நகரில் மழலையர் பள்ளி அருகில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 2குழந்தைகள் மற்றும் அமைச்சர் டெனிஸ் மொனஸ்டிர்ஸ்கி அவரது துணை அமைச்சர் , மா நில செயலாளர்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.