Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீர் சீனாவின் பகுதியா? டுவிட்டருக்கு இந்தியா கடும் கண்டனம்

காஷ்மீர் சீனாவின் பகுதியா? டுவிட்டருக்கு இந்தியா கடும் கண்டனம்
, வெள்ளி, 23 அக்டோபர் 2020 (08:04 IST)
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே காஷ்மீர் குறித்து பல ஆண்டுகளாக சர்ச்சைகள் இருந்து வரும் நிலையில் தற்போது திடீரென காஷ்மீர் சீனாவுக்கு சொந்தம் என்பது போன்ற ஒரு வரைபடத்தை டுவிட்டர் வெளியிட்டு உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் வரைபடங்களை வெளீயிட்டதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும், இது போன்ற ஒரு செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார் 
 
ஏற்கனவே இந்தியாவின் இறையான்மைக்கு பாதிக்கும் வகையில் செயல்பட்ட  காரணத்தினால்தான் டிக் டாக் செயலில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதேபோல் டுவிட்டரும் தொடர்ந்து இந்தியாவின் இறையாண்மைக்கு பாதிக்கும் வகையில் செயல்பட்டால் நிச்சயம் இந்தியாவில் டுவிட்டரும் தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் வெளுத்து வாங்க போகும் மழை: நார்வே வானிலை மையம் அறிவிப்பு