Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி ரூபாயில் எண்ணெய் –ஈரானுடன் புதிய ஒப்பந்தம்…

இனி ரூபாயில் எண்ணெய் –ஈரானுடன் புதிய ஒப்பந்தம்…
, வெள்ளி, 7 டிசம்பர் 2018 (08:19 IST)
இதுவரை அமெரிக்க டாலரில் மட்டுமே கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்த இந்தியா இனி ரூபாயில் வாங்குவதற்கு ஈரானுடன் புதிய ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையிலான அனுசக்தி ஒப்பந்தம் ட்ரம்ப் அமெரிக்கா அதிபராகப் பதவியேற்ற பின் முறிந்தது. அதன் பின் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஈரானுடன் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என மற்ற நாடுகளுக்கும் மிரட்டல் விடுத்து வருகிறது.

இருந்த போதிலும்  ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஈரானுடனான பொருளாதாரப் பரிவர்த்தனையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

இத்தகைய மிரட்டல்களுக்கு இடையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அந்நாட்டுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி வாங்கும் கச்சா எண்ணெய்க்கு, அமெரிக்க டாலருக்கு பதில் இந்திய ரூபாயில் பணத்தை செலுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு பாதியளவு பொருட்கள் ஏற்றுமதி செய்தும், மீதித்தொகையை ரூபாயாகவும் இந்தியா செலுத்த உள்ளது.

ஏற்றுமதி செய்யும் பொருட்களில் பெருமளவு உணவுப் பொருட்கள், தானியங்கள், மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த ஒப்ப்ந்தத்தின் முக்கிய் அம்சமாக இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்புக் குறைவதைத் தடுக்க முடியும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை பின்னுக்கு தள்ளியது திருப்பூர்