புஜாரா அபார சதம்: கெளரவமான ஸ்கோரை எட்டிய இந்தியா

வியாழன், 6 டிசம்பர் 2018 (12:42 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் இன்று காலை தொடங்கிய நிலையில் இந்திய அணி 20 ரன்களை எட்டுவதற்குள் கேப்டன் விராத் கோஹ்லி விக்கெட் உள்பட மூன்று விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

இருப்பினும் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சற்றுமுன் வரை இந்திய அணி 229 ரன்கள் என்ற கெளரவமான ஸ்கோரை எட்டியுள்ளது. புஜாரா அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 231 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா 37 ரன்களும், பண்ட் 25 ரன்களும், அஸ்வின் 25 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: 3 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா திணறல்