அமெரிக்காவில் 'தளபதி 63' படக்குழு

வியாழன், 6 டிசம்பர் 2018 (12:18 IST)
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து  தளபதி விஜய் அட்லீயுடன் இணைந்துள்ள படம் 'தளபதி 63'. இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. அதனால் 'தளபதி 63', விஜய் 63 என இருபெயர்களில் ரசிகரகள் தற்காலிகமாக அழைத்து வருகிறார்கள். 


 
இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. ஏ,ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். சண்டைக்காட்சிகளை அணல் அரசு மேற்கொள்ள உள்ளார்.  பாடல்களை விவேக் எழுதுகிறார். 
 
தற்போது தளபதி '63' படத்துக்கு செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே இயக்குனர் அட்லீ மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி  மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு  சென்றுள்ளனர். அங்கு ஒரு செல்பி எடுத்து, அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ஏஜிஎஸ் பட நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விஜய் சேதுபதி வெளியிட்ட "சித்திரம் பேசுதடி 2" ட்ரைலர்!