கர்நாடக மாநில காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் வீட்டில் மரத்தில் கட்டு கட்டாக ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் புயல் வேகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வருமானவரித்துறையினர் மாநிலம் முழுவதும் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் ஒரு மரத்தில் ஒரு கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினார்.
புத்தூர் என்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் குமார் ராய் என்பவரது சகோதரர் வீட்டில் தான் இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் அவரது சகோதரரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்