கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் குறித்து அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூபாய் 2000 உதவித்தொகை, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் மற்றும் மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் கொடுத்துள்ளது.
மேலும் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 3000 உதவித்தொகை, டிப்ளமா படித்தவன் இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1500 உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி இலவசங்களை அள்ளி வீசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.