Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெடி வைத்து தகர்க்கப்பட்டது கட்டிடம்! – உத்தரவை நிறைவேற்றிய கேரள அரசு!

வெடி வைத்து தகர்க்கப்பட்டது கட்டிடம்! – உத்தரவை நிறைவேற்றிய கேரள அரசு!
, சனி, 11 ஜனவரி 2020 (11:47 IST)
கேரளாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு அரசாங்கத்தால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

கேரளாவில் கொச்சி பகுதியில் மரடு என்ற இடத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கேரள அரசு கட்டிட அனுமதிக்கு கால அவகாசம் தருமாறு கோரியிருந்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் கட்டிடத்தை இடிக்க கால அவகாசம் அளித்ததுடன், கட்டிடத்தை அவகாசத்துக்குள் அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டது. மரடு கட்டிடத்தை இடிக்க கூடாது என அந்த கட்டிடத்தில் வீடுகள் வாங்கியவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அரசு கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதித்து, மக்களை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றியது. தொடர்ந்து வெடிக்குண்டு நிபுணர்களின் உதவி கொண்டு குடியிருப்பின் தரை தளத்திலிருந்து வெடிக்குண்டு வைக்கப்பட்டு கட்டிடம் பாதுகாப்பான முறையில் தகர்க்கப்பட்டது. தகர்ந்து விழுந்த கட்டிடத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இருந்து பறந்த லிஸ்ட்... அமித்ஷா ரிப்லைக்கு வெய்ட்டிங்!!