Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நினைத்தால் எந்த நேரத்திலும் முதல்வர் ஆவேன்; ஹேமமாலினி பேச்சு

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (10:22 IST)
நான் நினைத்தால் எந்த நேரத்திலும் முதல்வர் ஆவேன் என மதுரா தொகுதி எம்.பியும், பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி எம்.பியாக பதவி வகித்து வருபவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி. இவர் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம்  பான்ஸ்வாராவில் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சிலர் ஹேமமாலினியிடம் கேள்விகள் கேட்டனர். அதில் ஒன்று,  உத்தரப்பிரதேச முதல்வராக விருப்பமா? என்றனர்.
 
அதற்கு பதிலளித்த ஹேமமாலினி, எம்.பி ஆவதற்கு முன்னரே பா.ஜ.க.வின் கட்சி பணிகளால் ஈடுபட்டுள்ளேன். நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை அது என் சுதந்திரத்திற்கு முடிவாக அமைந்துவிடும் என தெரிவித்தார்.
 
மேலும், பிரதமர் மோடி பெண்கள் மர்றும் ஏழைகளுக்காக பிரதமர் மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரை போல ஒரு பிரதமர் அமைவது கடினம். மற்ற  கட்சிகளின் தலைவர்கள் எது வேண்டுமானலும் கூறலாம். ஆனால் நாட்டிற்காக யார் அதிகம் பணியாற்றிருகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என்று ஹேமமாலினி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments