Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

நினைவு சின்னத்தை கூட பாதுகாக்க முடியாதா? யோகியை டார்கெட் செய்த கெஜ்ரிவால்!

Advertiesment
தாஜ் மஹால்
, வியாழன், 26 ஜூலை 2018 (19:32 IST)
தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி விட்டது.
 
சமீபத்தில் தாஜ்மஹாலை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம் என காட்டமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதிலளித்தனர். 
 
தாஜ் மஹாலை மத்திய அரசின் புராதனத் திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளலாம் என்று உத்தரப் பிரதேச அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. 
 
இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்வரும்ம்று ட்விட் செய்துள்ளார். முதல்வரைக் கூட ஒரு நிறுவனம் தத்தெடுக்கட்டும்? ஒரு பாரம்பரிய நினைவு சின்னத்தை பாஜகவால் பராமரிக்க முடியாவிட்டால் பாஜக அரசு பதவி விலகட்டும் என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனா தான் எனக்கு முன்மாதிரி: பிரதமர் பதவியை ஏற்க போகும் இம்ரான்கான் பேட்டி