நேற்று காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதில் முக்கியமாக இந்த தீவிரமான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தாக்குதலில் பீஹார் மாநிலம் பாகல்பூரைச் சேர்ந்த ரத்தன் தாகூர் என்ற ராணுவ வீரரும் உயிரிழந்தார்.
இவரது இறப்பு குறித்து இவரது தந்தை கூறியதாவது:
என் மகனை இந்தியத் தாயின் சேவைக்காகவே நாம் நாட்டுக்குக் கொடுத்துவிட்டேன். அவன் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்து விட்டான். எனவே எனது இன்னொரு மகனையும் தேசத்தைக் காக்கவும் , பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிடவும் அனுப்ப இருக்கிறேன்.இந்த தாக்குதலுக்குக் காரணமான பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி தருவோம்... என கண்ணீர்விட்டபடி உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்.
இதைக் கேட்ட அங்குள்ள மக்கள் மிகுந்த பெருமைப்பட்டாலும். தாகூரை இழந்த துக்கம் தாளாமல் கண்ணிர் விட்டு அழுதனர்.