Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2000 ரூபாய் சிறப்பு நிதி: அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்

2000 ரூபாய் சிறப்பு நிதி:  அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்
, வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (13:45 IST)
ஏழை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 2000 ரூபாய் வழங்கும் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் தமிழகத்தில் உள்ள 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அந்த தொகையானது இந்த மாத இறுதிக்குள் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் கடந்த 13ந் தேதி சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் 2000 ரூபாய் வழங்குவதற்கு எதிராக முறையீடு செய்தார். எந்த கணக்கெடுப்பை வைத்து 60 லட்சம் ஏழைக்குடும்பங்களுக்கு அரசு இந்த தொகையை வழங்க இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. இது சட்டவிரோதமான செயலாகும். ஆகவே தமிழக அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். 
 
அவரின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசின் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது. ஆகவே அரசு அறிவித்தபடி ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 சீட் கேட்கும் காங்கிரஸ் ; 8 சீட் தரும் திமுக – பேச்சுவார்த்தையில் இழுபறி ?