நேற்று காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இதில் முக்கியமாக இந்த தீவிரமான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சமீப காலமாக காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் மோசமான தாக்குதலை நேற்று தீவிரவாதிகள் நடத்தினர். இதை நம் ராணுவ வீரர்கள் சாவாலாகவே எதிர்கொண்டனர்.
புல்வாமா மாவட்டத்தில் காரில் 350 கிலோ வெடி குண்டு நிரப்பிக் கொண்டு ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாகுதலில் மத்திய ரிசர்வ் படை போலீஸார் 40 பேர் உயிரிழந்தனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலக தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது :
அதில், இந்த தாக்குதலை நடத்தியுள்ளது ஜெய்ஷ் இ முகம்மது அமைப்புதான். ஏற்கனவே இவ்வமைப்பு ஐநா சபையால் தீவிரவாத இயக்கம் என்று அறிவுக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு ஆதரவாக மற்ற நாடுகள் புகலிடம் தருவதை நிறுத்த வேண்டும். இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது . இவ்வாறு தெரிவித்துள்ளது.