Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் முதல்வர், பயங்கரவாதியல்ல: ஆளுநரை தெறிக்கவிட்ட கெஜ்ரிவால்!

நான் முதல்வர், பயங்கரவாதியல்ல: ஆளுநரை தெறிக்கவிட்ட கெஜ்ரிவால்!

நான் முதல்வர், பயங்கரவாதியல்ல: ஆளுநரை தெறிக்கவிட்ட கெஜ்ரிவால்!
, வியாழன், 5 அக்டோபர் 2017 (13:32 IST)
டெல்லியில் துணைநிலை ஆளுநர் அனில் பாய்ஜாலுக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தனக்கு நெருக்கடி கொடுத்த துணைநிலை ஆளுநருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சட்டசபையில் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

 
 
டெல்லு சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 15000 ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்குவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கெஜ்ரிவாலிடம் ஆளுநர் அனில் பாய்ஜால் தெரிவித்தார். இதனையடுத்து அவையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கல்வி மேம்பாட்டிற்காக செய்வதாகவும், சேவைக்காக அல்ல எனவும் ஆம் ஆத்மியினரும் அரவிந்த கெஜ்ரிவாலும் கூறினர்.
 
அப்போது அவையில் பேசிய கெஜ்ரிவால், ஆளுநருக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், பயங்கரவாதி அல்ல. சிசோடியாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வித்துறை அமைச்சர், பயங்கரவாதி அல்ல. நாங்கள் டெல்லியின் மக்கள் பிரதிநிதிகள். இவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு நடக்க நாங்கள் அதிகாரிகள் அல்ல என ஆவேசமாக பேசினார்.
 
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சை ஆம் ஆத்மி கட்சியினர் மேஜையை தட்டி வரவேற்றனர். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சை சாமியார் ராதேமாவை மலர் தூவி வரவேற்ற காவல்துறையினர்