ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் ஜான் பால், ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் வழக்கில், காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
தெலங்கானா கலால் துறையின் சிறப்புப்படை மருத்துவர் ஜான் பால் வாடகை வீட்டில் நடத்திய சோதனையில், கஞ்சா, எம்.டி.எம்.ஏ, எல்.எஸ்.டி ஸ்டிக்குகள், கோகைன் உள்ளிட்டப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
டெல்லி மற்றும் பெங்களூருவிலிருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்த பிரமோத், சந்தீப், சரத் ஆகிய தனது மூன்று கூட்டாளிகளுக்கு பணம் பெற்று, தனது வீட்டையே பதுக்கி வைக்கும் மற்றும் விநியோக மையமாக பயன்படுத்தியுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சமீபத்தில் மொய்னாபாத் ரேவ் பார்ட்டியில் 22 சிறார்கள் உட்பட 62 பேர் பிடிபட்டது மற்றும் 401 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.