அமெரிக்காவை சேர்ந்த செலஸ்டிஸ் விண்வெளி நிறுவனம் அனுப்பிய விண்கலம் தொழில்நுட்ப கோளாறல் பசுபிக் கடலில் விழுந்து மூழ்கியது.
அமெரிக்காவில் விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புக்கான கதவுகள் திறந்துவிடப்பட்ட நிலையில் ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆரிஜினி, செலஸ்டிஸ் என தனியார் விண்வெளி நிறுவனங்கள் கோலோச்சத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் செலஸ்டிஸ் நிறுவனம் மக்கள் தங்கள் விருப்பமானவர்கள் அஸ்திடை விண்வெளிக்கு அனுப்பலாம் என்ற திட்டத்தை அறிவித்து அதற்காக பெருமளவில் பணமும் பெற்றது. பலரும் தங்கள் பெற்றோர்களின் அஸ்தியை முன்பதிவு செய்துள்ளனர். 166 பேரின் அஸ்தியையும், சில கஞ்சா செடி விதைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட செலஸ்டிஸின் Mission Possible விண்கலம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விண்வெளியை அடையாமல் பசுபிக் கடலில் விழுந்து மூழ்கியது.
விண்வெளிக்கு அனுப்புவதாக சொல்லிவிட்டு அஸ்தியை கடலுக்குள் மூழ்கடித்த செலஸ்டிஸை பணம் கொடுத்தவர்கள் கண்டித்துள்ளதுடன், இழப்பீடு தரும்படியும் குடைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளதாக தகவல்.
Edit by Prasanth.K