Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

Advertiesment
Uttar Pradesh

Siva

, திங்கள், 14 ஏப்ரல் 2025 (19:23 IST)
மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பக்கத்து வீட்டுக்காரனை சரமாரியாக அடித்த கணவர், ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் அவருடைய ஆணுறுப்பை பல்லால் கடித்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியில் வாடகை வீட்டில் தனது மனைவி உடன் வசித்து வரும் கணவன், வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்ததாக தெரிகிறது. வெள்ளிக்கிழமை தான் வீடு திரும்பும் என்று கூறிவிட்டு சென்ற அவர், வேலை சீக்கிரமே முடிந்து விட்டதால், வியாழக்கிழமை இரவே வீடு திரும்பினார்.
 
அப்போது, வீட்டில் படுக்கையில் தனது மனைவியுடன் பக்கத்து வீட்டுக்காரர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கிருந்து ஓட முயன்ற பக்கத்து வீட்டுக்காரனை அந்த பெண்ணின் கணவர் பிடித்து சரமாரியாக அடித்து, அதன் பின்னர் அவருடைய ஆணுறுப்பை பற்களால் கடித்துள்ளார்.
 
அந்த நபரின் ஆணுறுப்பில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் பயத்தில் அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்தில் அடைக்கலமாக புகுந்தார்., அதன் பின்னர் அந்த நபரை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!