கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள இருமாடிக் கட்டடம் ஒன்றின் மொட்டை மாடியில், சுமார் ஒரு மாதம் பழமையான மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஃபிளக்ஸ் போர்டுகளை அகற்ற வந்த தொழிலாளர்கள் சிதறி கிடந்த எலும்புகளைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
உள்ளூர் காவல்துறையினரும் தடயவியல் துறையினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, எலும்புக்கூட்டின் பாகங்களை சேகரித்தனர். ஆரம்பகட்ட விசாரணையில், எலும்புக்கூடு ஒரு மாதம் பழமையானது என்று தெரியவந்துள்ளது. இறந்தவர் யார் என்ற தகவல் இதுவரை இல்லை.
இந்த கட்டடத்தில் முன்பு ஒரு தமிழ்நாட்டுக் குடும்பம் வசித்து வந்தது என்ற முக்கிய தகவல் விசாரணையில் கிடைத்துள்ளது. அந்த குடும்ப உறுப்பினர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
தற்போது அந்தக் கட்டடத்தில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.