Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்தவர் வீடு இடிப்பு.. புல்டோசரால் தரைமட்டம்..!

Mahendran
புதன், 26 மார்ச் 2025 (10:46 IST)
திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்தவரின் வீட்டை அந்த பெண்ணின் கணவர் வீட்டார் புல்டோசர் மூலம் இடித்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
குஜராத் மாநிலத்தின் பரூக் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவருக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கணவரின் வீட்டார் அந்த பெண்ணை கண்டித்தனர். ஆனாலும், அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். அதன் பின், அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவர் பழகி வந்த நபருடன் தலைமறைவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
 
இதனால் ஆத்திரமடைந்த கணவனின் குடும்பத்தினர், பெண்ணை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்பட்ட நபரின் வீட்டுக்கு சென்று எச்சரிக்கை விடுத்தனர். இரண்டு நாள் கழித்தும் எந்த தகவலும் வராததால், ஆத்திரம் அடைந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அந்த நபரின் வீட்டுக்கு சென்று புல்டோசர் வைத்து வீட்டை இடித்து சேதப்படுத்தினர்.
 
இது குறித்து தலைமறைவாக உள்ள நபரின் தாயார் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், பெண்ணின் கணவர் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவ்வப்போது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குஜராத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments