மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் தனது மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததாக ஒரு பெண் கூறிய நிலையில், இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த வீரேந்திர யாதவ் என்ற திருமணமான இளைஞர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்தார் என்று புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து, வீரேந்திர யாதவ் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வீரேந்திர யாதவ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, "திருமணமான ஒரு பெண்ணுக்கு பொய்யான வாக்குறுதி அளித்து உடலுறவு ஒப்புதல் பெற்றதாக கூற முடியாது" என்று வாதித்தார்.
ஆனால், அந்த பெண்ணின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், "இளைஞன் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்" என்று குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதத்தை கேட்ட பின் நீதிபதி, "திருமணமான பெண்ணுக்கு பொய்யான திருமண வாக்குறுதி அளித்து உடலுறவு செய்தார் என்பது தவறான புரிதல்" என்று கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.